இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவின் ‛பின்டு கி பாப்பி' படத்தின் டிரைலரை, நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டார். காதல், நகைச்சுவை, பொழுபோக்கு கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
சுஷாந்த், ஜன்யா ஜோஷி, விதி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். கணேஷ் ஆச்சார்யா, விஜய் ராஜ், முரளி சர்மா, சுனில் பால், அலி அஸ்கர், பூஜா பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விதி ஆச்சார்யா தயாரித்துள்ளார் மற்றும் ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ளார்.
டிரைலரை வெளியிட்டு அக்ஷய் குமார் கூறுகையில், "இந்தப் படத்துக்காகவும் எனது நண்பர் கணேஷ் ஆச்சார்யாவுக்காகவும் இங்கு வந்துள்ளோம். நாங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக நண்பர்கள். என்னுடைய 'டாய்லெட் ஏக் கதா' படத்துக்காக அவர் 7-8 பாடல்களுக்கு நடனம் அமைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.
கணேஷ் ஆச்சார்யா கூறுகையில், "இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என் மனைவி விதியை சம்மதிக்க வைத்து, தயாரித்தேன். சுவாமி படத்திலிருந்து இப்போது வரை படங்களை தயாரிக்க முயற்சித்து வருகிறேன். நான் எப்போதும் கஷ்டப்படுகிறேன் ஆனால் கடவுள் எனக்கு உதவுகிறார். என் மனைவி தான் எனது பலம். நான் எப்போதும் புதிய நபர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
இந்தபடம் 2025, பிப்., 21ல் ரிலீஸாகிறது.