அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இன்றைய தலைமுறைக்கு பி.விட்டலாச்சார்யா பற்றி அதிகம் தெரியாது. காரணம் அவர் அன்று நிகழ்த்திய தொழில்நுட்ப மாயாஜாலம் இப்போது செல்போனில் சர்வசாதாரணமாக காண கிடைக்கிறது. சமூக படங்கள் கோலோச்சிய காலத்தில் அவரின் மாயாஜால படங்கள் கடுமையான விமர்சிக்கப்பட்டது. 'சினிமா என்பது மக்களை மகிழ்விக்கத்தான், அறிவை வளர்க்க புத்தகங்கள் இருக்கிறது' என்பார்.
அவர் நாட்டுப்புற கதைகளில் இருந்து திரைப்படத்திற்கான கதைகளை உருவாக்கினார். அன்றைக்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டைனோசர்கள், ராட்சத பல்லிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளுடன் சண்டையிடும் ஹீரோவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லை. அவரது கலை இயக்குனர் நாகராஜ் மற்றும் நிபுணத்துவ ஒளிப்பதிவாளர்கள் எச்.எஸ். வேணு, எஸ்.டி. லால் ஆகியோரின் உதவியுடன், மேட் ஷாட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கினார்.
அவர் தனது படங்கள் அனைத்தையும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக்கி பின்னர் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்தார். 'பெண் குலத்தின் பொன் விளக்கு' என்ற சமூக படத்தையும், 'மந்திரி குமாரன்' என்ற சரித்திர படத்தையும் தமிழில் இயக்கினார். இன்று அவரின் 26வது நினைவு நாள்.