2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
2025ம் ஆண்டின் கோடை விடுமுறை இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான மே 30ம் தேதி “ஆண்டவன், ஜின் த பெட், ராஜபுத்திரன், த வெர்டிக்ட்” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்ப ட்டுள்ளது. இவை அனைத்துமே முன்னணி நடிகர்கள் நடிக்காத சிறிய படங்கள்தான்.
அடுத்த வாரம் ஜுன் 5ம் தேதி பெரிய படமான 'தக் லைப்' படம் வெளிவருகிறது. பொதுவாக அம்மாதிரியான படங்கள் வரும் போது அதற்கு ஒரு வாரம் முன்னதாகவும், பின்பும் படங்களை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால், இப்போதெல்லாம் கிடைக்கும் இடைவெளியில், தியேட்டர்களில் படங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு சில முக்கிய தியேட்டர்கள் கிடைத்தால் கூட போதும் படங்களை வெளியிட்டுவிடுவோம் என்று வெளியிடுகிறார்கள். 'தக் லைப்' படம் அடுத்த வாரம் வரும் நிலையிலும், அன்றைய தினத்தில் 'பரமசிவன் பாத்திமா, பேரன்பும் பெருங்கோபமும்' படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாரத்தின் சனி மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவதில் குடும்பத்தினர் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்களா என்பதும் கேள்விதான்.
இந்த கோடை விடுமுறை மாதமான மே மாதத்தில் வந்த படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய இரண்டு சிறிய படங்கள்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.