ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பேரி டேல் பிக்சர்ஸ், ஏஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ், விஜிவி கிரியேஷன்ஸ், சினிமா ரஸா புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.ஆர்.பாலா, அனில் குமார் ரெட்டி, வெங்கடாச்சலம் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஜின்'. டி.ஆர்.பாலா இயக்கி உள்ளார். முகேன் ராவ், பவ்யா திரிகா, பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய், ரித்விக் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் டி.ஆர்.பாலா கூறியதாவது : 'ஜின்' என்றால் பேய் அல்ல. அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம். நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். அது நாம் பயன்படுத்துகின்ற தன்மையைப் பொறுத்தது. வழக்கமான பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவத்தை தரும்.
சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சியிலுள்ள டெக்னீஷியன்களின் 8 மாத உழைப்பில் 'ஜின்' கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 40 நிமிடங்கள் இடம்பெறும் 'ஜின்' கதாபாத்திரத்தின் அட்டகாசங்கள் அனைத்து தரப்பினரையும் கவரும். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், மலேசியாவை கதைக்களமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.