மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், கிருஷ்ணர் மற்றும் ராமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரது ஆஜாகுபானுவான தோற்றமும், கணீரென்ற குரல் வளமும், தெளிவான தெலுங்கு உச்சரிப்பும் அவரை வாழும் கடவுளாகவே தெலுங்கு மக்களுக்கு காட்டியது. வீடுகளில் பூஜை அறையில் கிருஷ்ணர் படமாக என்.டி.ராமராவ் படத்தை வைத்தனர் தெலுங்கு மக்கள்.
திருப்பதிக்கு சாமி கும்பிட பஸ்களில் வரும் தெலுங்கு பக்தர்கள் அப்படியே சென்னை வந்து விடுவார்கள். அப்போது மாம்பலம் பசுல்லா ரோட்டில் என்.டி.ராமராவ் வீடு இருந்தது. ரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டு திருப்பதியில் அடித்த மொட்டைத் தலையோடு ராமராவை பார்க்க காத்து கிடப்பார்கள். தினமும் காலையில் குளித்து பூஜையை முடித்ததும் ராமராவ் வீட்டின் முன்னால் வந்து முதலில் காண்பது தனது பக்தர்களான ரசிகர்களைத்தான். வீட்டு வாசலில் நிற்கும் காவலர்கள் இருபது இருபது பேராக பிரித்து உள்ளே அனுப்புவார்கள். அவர்கள் நேராக ராமராவ் காலில் விழுந்து வணங்குவார்கள். தங்கள் கோரிக்கைகளை எழுதி அவரது காலடியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும்போது ராமராவ் வானத்தை நோக்கி கையை உயர்த்தி இறைவனை வணங்குவார்.
பிற்காலத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் 'இறைவனை வணங்குவது போல பக்கதர்கள் உங்கள் காலில் விழுந்து வணங்குவதை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்' என்று கேட்டபோது ராமராவ் சொன்னார். 'அவர்கள் என் காலில் விழவில்லை. அந்த பகவான் காலில்தான் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து வணங்கும்போது நான் வானத்தை பார்த்து, இறைவா இவர்கள் என் காலில் விழவில்லை உன் காலில் விழுகிறார்கள் அதை ஏற்று அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பாயாக' என்று வேண்டுவேன். என்றார். அப்படி பூமியில் வாழ்ந்த கடவுளுக்கு இன்று 103வது பிறந்த நாள்.