காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில், சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கூக்குரல் அதிகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது குறிப்பாக தமிழக அரசு சிறிய அளவிலான திரையரங்குகளை கட்டவேண்டும் என்றும், அதில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் அம்மா திரையரங்கம் என்கிற பெயரில் மினி திரையரங்கம் கட்டப்போவதாக கூட கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டது.. ஆனால் அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் தான் இருக்கிறது.
அதேசமயம் கேரளாவிலும், இதேபோன்று சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்களை திரையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த சில வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கலை பண்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சாஜி செரியன் என்பவர் மலையாள சினிமாவில் தயாராகும் சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்றுவதற்காக, கேரள அரசு சார்பிலேயே ஓடிடி தளம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் மொத்தம் 700 திரையரங்குகள் தான் இருப்பதால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதற்காக, அரசே ஓடிடி தளம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.