'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கேரளா அருகே அரபிக்கடலில் உள்ளது லட்சத் தீவுகள். இதன் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வரும் சில நிர்வாக மாற்றங்களுக்கு பரவலான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் "கொரோனாவை உயிரி ஆயுதமாக அரசும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியும் பயன்படுத்துகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். இதற்காக, அவர் மீது போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்யும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சுல்தானா தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது" என்றார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம், சுல்தானா மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது.