ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? |

மலையாளத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வில்லன் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் பிஜுமேனன். தமிழில் தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் வெள்ளிமூங்கா என்கிற படத்தில், கதையின் நாயகனாக நடித்திருந்தார் பிஜு மேனன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு உயர்ந்தார் பிஜுமேனன்.
அந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மோகன்லால் நடித்த 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்ய ராத்திரி என்கிற படத்தை தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பைத் தந்தார் பிஜுமேனன் அந்த படமும் தோல்வியை தழுவியது.
தற்போது கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனை வைத்து 'எல்லாம் சரியாகும்' என்கிற படத்தை இயக்கி உள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த நிலையில் ஜிபு ஜேக்கப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக, மீண்டும் அவரது டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பிஜுமேனன். தற்போது அவர் எடுத்து வரும் பட டைட்டில் பாணியில் சொல்வதென்றால் இனி ஜிபு ஜேக்கப்பிற்கு எல்லாம் சரியாகும் என்று சொல்லலாம்.