ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிஜூமேனன். கடந்த வருடம் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் இவருக்கு மொழி தாண்டி இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில், இன்று பிஜூமேனன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று தான் லலிதம் சுந்தரம். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை அவரின் தம்பி மது வாரியர் இயக்குகிறார். சொல்லப்போனால் தன் தம்பியை இயக்குனராக அறிமுகப்படுத்தவதற்காக இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார் மஞ்சுவாரியர்.
இன்று பிஜூமேனன் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் பரிசு தரும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மஞ்சு வாரியர். மேலும் விரைவில் பிஜூமேனனுடன் இணைந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். தொண்ணூறுகளின் இறுதியில் இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து இருந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.