தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை, இந்த வருடம் ஜன-13 முதல் இயங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. அதேசமயம் மூன்று காட்சிகளை மட்டுமே நடத்தி கொள்ளலாம் என்றும் இரவு 9 மணிக்கு மேல் படங்களை திரையிட கூடாது என்று நிபந்தனையும் விதித்திருந்தது. கேரளாவை பொறுத்தவரை செகன்ட் ஷோக்களில் தான் அதிக அளவு வசூலாவது வழக்கம் இதனால் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே தியேட்டர் ரிலீஸை தவிர்த்து ஓடிடி தளங்களை தேடி சென்றன..
இந்த நிலையில் வரும் நாளை (மார்ச்-11) முதல் இரவு 9 மணி காட்சியையும் திரையிடலாம் என, கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மம்முட்டி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படம், நாளை (மார்ச்-11) ரிலீஸாகும் என உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த மார்ச்-4ஆம் தேதியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப்படம், திடீரென ரிலீஸ் தேதியை கேன்சல் செய்தது. அதற்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் யோசித்து வந்தநிலையில் தான், அரசின் நிபந்தனை தளர்வு அவர்களது முடிவை மாற்றிவிட்டது..