பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் பிராமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் 'ஆச்சார்யா'. கொரட்டால சிவா இயக்கி வரும் இந்தப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் தந்தையுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் அது கெஸ்ட் ரோல் என சொல்லப்பட்டாலும்.. படம் முழுவதும் வரும் அளவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்துள்ளார் என்பதை அவரே சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்த மாற்றத்தினால் அவருக்காக கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் இந்தப்படத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது ராம்சரண்-பூஜா ஹெக்டே இருவரும் நடிக்கும் காட்சிகள் ராஜமுந்திரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரணுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..