நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
நடிகர் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் முக்கியமானவர் மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.. மலையாள திரையுலக தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராடு மற்றும் வில்லன் என மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கினார்.. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மோகன்லால் நடிக்கும் 'ஆராட்டு' என்கிற ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்.
இன்னொரு பக்கம் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பிரைஸ்ட்' என்கிற படத்தையும் இன்னொரு தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் என்பவருடன் இணைந்து இவர் தயாரித்துள்ளார். முதன்முறையாக மஞ்சு வாரியரும், மம்முட்டியும் இணைந்து நடித்துள்ள படம் இது என்பது கூடுதல் சிறப்பு. இது கொரோனா தாக்கத்திற்கு முன்னரே ஆரம்பித்த படம் என்றாலும், சமீபத்தில் தான் மீதி படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்துள்ளனர். இன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அரபு நாடுகள் சிலவற்றில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருப்பதால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டனர்.