ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
நடிகைகளில் என்றும் இளமை தோற்றத்துடன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துபவர் நடிகை நதியா. எண்பதுகளில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக இருந்த நதியா, மலையாளத்தில் அறிமுகமான காலகட்டத்தில், 'ஒன்னிங்கு வந்நெங்கில்', 'கண்டு கண்டறிஞ்சு' என தொடர்ந்து மம்முட்டியின் படங்களில் இடம் பெற்று வந்தார்..
அதன்பின் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கிய நதியா, 15 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் மம்முட்டியின் டபுள்ஸ் படம் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் மம்முட்டியின் சகோதரியாக நடித்திருந்தார் நதியா. இந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து, தற்போது மீண்டும் மம்முட்டியுடன் பீஷ்ம பர்வம் என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார் நதியா. இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி வந்து இறங்கியுள்ள நதியா, இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்..