மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் |
யு டியூப் மூலம் திரைப்பட டிரைலர், டீசர்களை பிரபலப்படுத்த ஆரம்பித்த கடந்த சில வருடங்களில் ஹிந்தி, தமிழ்ப் படங்களின் டிரைலர், டீசர்கள் தான் பெரிய சாதனைகளைப் படைத்து வருகின்றன. கடந்த சில வருடங்களாக தெலுங்கில் 'பாகுபலி', கன்னடத்தில் 'கேஜிஎப் 2' ஆகியவற்றின் வீடியோக்களும் புதிய சாதனைகளைப் படைத்தன.
மலையாளத்தில் இதுவரையில் வெளிவந்த டீசர்களில் 2018ல் வெளியிடப்பட்ட 'ஒரு அடார் லவ்' டீசர் 2 கோடியே 97 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. டிரைலர்களில் 2019ல் வெளியிடப்பட்ட 'லூசிபர்' டிரைலர் 1 கோடியே 17 லட்சம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தற்போது 'த்ரிஷ்யம் 2' படத்தின் டிரைலர் 2 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. மலையாளத்தில் ஒரு திரைப்பட டிரைலர் 2 கோடி பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை.
பொதுவாகவே, அமேசான் ஓடிடி தளம் அவர்கள் தளத்தில் வெளியாகும் படங்களின் டிரைலர், டீசர்களை யு டியுபில் அதிக பார்வைகளைப் பெற வைக்கும். அது இந்தப் படத்திற்கும் நடந்துள்ளது.