ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரமாண்டமான வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ் தேதியை மாற்றப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை முன் கூட்டியே, அதாவது மே-13ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். காரணம் மோகன்லால் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிடியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் அனைத்து தரப்பினருக்குமே நல்ல லாபம் கிடைத்திருக்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் வருத்தத்துடன் கூறப்படுகிறது. த்ரிஷ்யம்-2வுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மரைக்கார் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து தியேட்டர் உரிமையாளர்களை சமாதனப்படுத்துவதுடன் நல்ல வசூலையும் பார்க்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.