சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வரும் 'தி பிரைஸ்ட்' படம், அவரது திரையுலக பயணத்தில் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம் என்று சொல்லலாம். கடந்த 20 வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட மஞ்சு வாரியர், மம்முட்டி படத்தில் மட்டும் இதுநாள் வரை நடித்ததே இல்லை.. இதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி பிரைஸ்ட்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.
திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்பே முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மஞ்சு வாரியர் மற்றும் இன்னொரு நாயகியான நிகிலா விமல் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை படமாக்கி முடித்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். மஞ்சு வாரியர் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தப்படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.