சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் படம் 'யுவரத்னா'. இப்படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
'கேஜிஎப் சேப்டர் 2' படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. சந்தோஷ் ஆனந்த்ராம் இப்படத்தை இயக்குகிறார். கடந்த வருடம் தசரா விடுமுறையில் இப்படத்தை வெளியிடுவதாக இருந்தார்கள். கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
இதனிடையே, இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை மறுக்கும் விதத்தில் இன்று தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் 1ம் தேதியன்று இப்படம் தமிழ், தியேட்டர்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு புனித் ராஜ்குமார் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.