ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் |
இன்றைய தேதியில் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இன்னொருவர் டொவினோ தாமஸ். இதில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம், கடுவா, ஜனகனமன, கோல்டு கேஸ், குருதி என கைநிறைய படங்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது தீர்ப்பு என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தி தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. திலீப்-சித்தார்த் நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார். அந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் முரளி கோபி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.. அதுமட்டுமல்ல, பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..