பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள திரையுலகில் பிரபல பாடலாசிரியாக வலம் வந்த அனில் பனச்சூரன் என்பவர் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 55.. மாவேலிக்கராவில் உள்ள செட்டிக்குளக்கரா கோவிலுக்கு சென்றபோது, அவர் திடீரென நினைவிழந்து மயங்கிய நிலையில், மாவேலிக்கரா மற்றும் கருநாகப்பள்ளியில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டார்.. அதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அனில் பணச்சூரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு கொரோனா பாசிடிவ் என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும், அவரது குடும்பத்தினர், இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸில் புகார் அளித்துள்ளனராம்.
கடந்த 2005 முதல் மலையாள திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த அனில் பனச்சூரன், அடிப்படையில் கம்யூனிச சிந்தனை கொண்டவர்.. அதனால் மலையாளத்தில் கம்யூனிச கதைக்களத்தில் உருவான படங்களில் அதிகம் பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான, 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இவர் எழுதிய 'ஜிமிக்கி கம்மல்' பாடல் உலக அளவில் புகழ்பெற்று, இவரை இன்னும் நன்கு பிரபலமாக்கியது.. கடந்த வருடம் விஜய்சேதுபதி மலையாளத்தில் அறிமுகமான மார்க்கோனி மத்தாய் படத்திலும் இவர் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.