கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்டமான வரலாற்று படம் 'மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த வருடமே தயாராகிவிட்ட இந்தப்படம் கடந்த மார்ச்-26ஆம் தேதியிலேயே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சரியாக அந்த சமயத்தில் இருந்துதான் இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து, சில மாதங்கள் கழித்து, ஒடிடியில் இந்தப்படத்தை வெளியிடும் வாய்ப்புகள் தேடி வந்தது. இருந்தாலும் தியேட்டர்களில் தான் இந்தப்படத்தை ரசிகர்கள் முழுமையாக பார்த்து ரசிக்க முடியும் என ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருந்தனர். வரும் மார்ச் மாதத்திற்குள் தியேட்டர்களில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர் என்றே தெரிகிறது.