''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டன. ஓரளவு நிலைமை சரியானதால், கடந்த அக்டோபர் மாதமே தியேட்டர்கள் பாதுகாப்பு விதிகளின்படி செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் வரும் ஜன-5ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிடலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
திரைப்பட, மற்றும் திரையரங்கங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து பாதிக்கப்பட்ட கூடாது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய சந்தோஷத்தை தரவில்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் குஷியாகியுள்ளன.