மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் |
கிரிஷ் இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி வரும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, வித்யாபாலன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் என்டிஆருடன் நடித்த பல நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறது.
அந்த வகையில், அவருடன் சாவித்ரி சில படங்களில் நடித்திருப்பதால் அவரது வேடத்தில் மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் சாவித்ரியாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க இப்போது ரகுல் பிரீத் சிங் கமிட்டாகியிருக்கிறார்.
மேலும், தயாரிப்பாளர் நாகிரெட்டி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் இந்த படத்தில் மேலும் சில முக்கிய கதபாத்திரங்களுக்கான நடிகர் நடிகையர் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.