முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்த சஞ்சய் தத் தற்போது தெலுங்கில் டபுள் ஐ-ஸ்மார்ட் படத்திலும், கன்னடத்தில் கேடி தி டெவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும், நடிகருமான துருவா சார்ஜா வீட்டு விசேஷத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் சஞ்சய் தத். சில மாதங்களுக்கு முன்பு துருவா சார்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அதற்கு பெயர் சூட்டும் விழாவை பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் நடத்தினார் துருவா சார்ஜா.
இந்த நிகழ்வில் தான் சஞ்சய் கலந்து கொண்டார். தற்போது கன்னடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள கேடி டெவில் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் துருவா சார்ஜா தான். அந்த நட்பின் அடிப்படையில் தான் சஞ்சய் தத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். மேலும் துருவா சார்ஜாவின் மாமாவான நடிகர் அர்ஜுநும் இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் என்பதும் லியோ படத்திற்கு பிறகு இந்த நிகழ்வின் மூலம் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.