''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரைடே எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயந்தன் தயாரித்துள்ள படம் 'டிராக்டர்'. படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் திரைப்படத்திற்கு புதுமுகங்கள். ரமேஷ் யந்த்ரா இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் யாத்ரா கூறும்போது “இந்த படத்தில் வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக நடிகர்களின் வசனத்தை தளத்திலேயே பதிவு செய்தும் மற்றும் இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்துள்ளோம். இது வாழ்வியலின் நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது. வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் நடந்து வரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் செல்லவும், மேலும் பாரிஸில் வாழும் தமிழர்களுக்காக ஒரு சிறப்பு திரையிடல் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.