‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தமிழ் சினிமாவை கலக்கிய நட்சத்திர காமெடி நடிகை எம்.சரோஜா. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.சரோஜா 1951ம் ஆண்டு 'சர்வாதிகாரி' படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பின்னர் காமெடிக்கு மாறினார். கல்யாண பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன் உளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
1950 முதல் 1958ம் ஆண்டு வரை தங்கவேலுக்கு ஜோடியாக மட்டும் 50 படங்களுக்கு மேல் நடித்தார். தொடர்ந்து நிஜத்திலும் அவரை காதலித்து வந்தார். கல்யாண பரிசு படம் இந்த ஜோடியின் காமெடி காட்சிகளால் பேசப்பட்டது. காமெடி காட்சிகள் மட்டும் தனி கேசட்டாகவே வெளிவந்தது.
இந்த படத்தின் 25வது வார வெற்றி விழாவின்போது மதுரை கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் இருவரும் சேர்ந்து நடித்தனர். தங்கவேலு மறைவுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.சரோஜா. அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான். ‛‛என்னுடைய கணவர் எனக்கு விட்டுட்டு போன சொத்து என்றால் நடிப்புதான். அந்த நடிப்பை விற்று நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை எவ்வளவோ பெரிய கம்பெனிகள் மற்றும் சின்ன கம்பெனிகள் நடிக்க அழைப்பு விடுத்தாலும் என் மனம் திரைப்படங்களில் நடிக்க அனுமதிப்பதில்லை'' என்றார்.
திரையில் காமெடி நடிகையாகவும், நிஜத்தில் காதல் ஹீரோயினாகவும் வாழ்ந்த எம்.சரோஜா 2012ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார்.