'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
தான் நடித்த 'உதாகரணம் சுஜாதா' படம் நூறு நாட்கள் ஓடியதில் சந்தோஷத்தில் இருக்கிறார் மஞ்சு வாரியர். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'மோகன்லால்'. ஆம் படத்தின் பெயரே மோகன்லால் தான். இந்தப்படத்தில் மோகன்லாலின் தீவிர ரசிகையாக மீனுக்குட்டி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.
அதுமட்டுமல்ல, முதன்முறையாக இந்தப்படத்தில் படம் முழுவதும் காமெடியில் கலக்கி உள்ளாராம் மஞ்சு வாரியர். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் மோகன்லால் ரசிகையாக நடித்துள்ள அதே நேரத்தில், தற்போது மோகன்லாலுடன் இணைந்து 'ஒடியன்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.
இது பற்றி கூறும்போது, “ஒரே நேரத்தில் லாலேட்டன் ரசிகையாக நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் அவரது படத்தில் கதாநாயகியாவும் நடிக்கும் அதிர்ஷ்டம் என்னைத்தவிர வேறு யாருக்கும் கிடைத்திருக்காது” என்கிறார் மஞ்சு வாரியர் பெருமிதத்துடன்.