அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
நடிகை விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்ட நிகழ்வில் அவர் மீது பொது மக்கள் என்ன மாதிரியான கருத்துக்களை கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால் அந்த கருத்தையும் திலீப்பின் ராம்லீலா படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
ஆம்.. படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமோ என பயந்து பயந்து கொஞ்சம் தயக்கத்துடனேயே கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்ட 'திலீப்பின் ராம்லீலா' படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதுமட்டுமல்ல படத்திற்கு இந்த இரண்டாவது வாரத்தில் இன்னும் சில தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டுகள் தொங்க விடப்பட்டுள்ளன. இன்னும் சில தியேட்டர்களில் நள்ளிரவு காட்சியாக படத்தை திரையிட்டு கூட்டத்தை சமாளித்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த விநியோகஸ்தர் தரப்பு ஆட்கள், கடந்த வருடம் புலி முருகன் வெளியானபோது இருந்த சூழல் தான் தற்போது ராம்லீலாவுக்கும் நிலவுகிறது.
இதே ரீதியில் படம் ஓடினால், புலி முருகன் சாதனைகள் எதையும் உடைக்காவிட்டாலும், புலி முருகன் தகர்த்துச் சென்ற சாதனைகளை இந்தப்படமும் தகர்க்கும் என கணித்துள்ளார்களாம். படம் எந்த சிக்கலும் இன்றி நல்லபடியாக ஓடுவதால் உற்சாகமான தயாரிப்பாளர் தோமிச்சன், பப்ளிசிட்டியை இன்னும் முடுக்கி விட்டுள்ளதுடன், கடந்த வருடம் புலி முருகன் படத்திற்கு கொடுத்தது போல ராம்லீலா படத்திற்கும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அசத்தி வருகிறார்.