'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி அடுத்தபடியாக சீனியர் நடிகர்களின் இப்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் திலீப். ஆனால் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமினில் வெளிவந்த பிறகு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை மட்டுமே செய்து கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ராம்லீலா திரைப்படம் 100 கோடி வசூலித்து ரசிகர்கள் அவர் மேல் கொண்டிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தியது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கதைத்தேர்வில் அவர் கோட்டை விடுவதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் அன்ட் பேமிலி படம் டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி சந்திப்பை படக்குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் திலீப் பேசும்போது, “எப்படி எனக்கு இக்கட்டான சமயத்தில் ராம்லீலா திரைப்படம் கை கொடுத்ததோ, அதேப்போல தற்போது பிரின்ஸ் அன்ட் பேமிலி திரைப்படமும் எனக்கு கை கொடுத்துள்ளது. எட்டு ஆண்டுகளாக நான் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் ஒருநாள் கடவுள் நிச்சயமாக நான் பேசுவதற்கு எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார். அந்த ஒரு நாள் வரும் வரை நான் அமைதியாக காத்திருப்பேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.