அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது |
தமிழ் சினிமாவில் 'துருவங்கள் பதினாறு' போல சில வித்தியாசமான படைப்புகளுக்கு தனது நடிப்பால் உயிர் கூட்டியவர் தான் நடிகர் ரகுமான். மலையாள திரையுலகில் சில காலம் ஹீரோவுக்கு நண்பனாக, இல்லையென்றால் வில்லன்களில் ஒருவராக பயன்படுத்தி வந்தார்கள். ராஜேஷ் பிள்ளை, ரோஷன் ஆண்ட்ரூஸ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தான் ரகுமானை வேறு பரிமாணத்தில் காட்டினார்கள். அப்படி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய மும்பை போலீஸ் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ரகுமான்.
அந்தப்படத்தில் நாயகன் பிருத்விராஜுக்கு இணையாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து 'ரணம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் நிர்மல் சகாதேவ் இயக்குகிறார். இந்தப்படத்தில் ரகுமானுக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவிலேயே யாரும் நடித்திராத ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம் நிர்மல் சகாதேவ். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப்படம் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.