அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கடந்த மார்ச்சிலிருந்து மலையாளத்தில் எல்2 எம்புரான், தொடரும் மற்றும் சமீபத்தில் ஹிருதயபூர்வம் ஆகிய படங்கள் மோகன்லால் நடிப்பில் வெளியாகின. அதேப்போல கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தெலுங்கில் வெளியான கண்ணப்பா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள விருஷபா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வரும் அக்டோபர் 16ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் மோகன்லால். படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் வியாஸ் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார். நந்தா கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சிவரஞ்சனி மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தம்பதியின் மகனான மேகா ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.