250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் | பிளாஷ்பேக்: சத்யராஜை ஹீரோவாக்கிய 'சாவி' |
1980களில் இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஒரு ஹீரோவுக்கு முக்கியமான தகுதியாக இருந்தது. இரட்டை வேடங்களில் நடிப்பவர்கள் பெரிய ஹீரோக்களாக கொண்டாடப்பட்டார்கள். இதனால் எல்லா நடிகர்களுமே இரண்டு வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார்கள் அதற்கான கதைகளை தேர்வு செய்து நடித்தார்கள்.
அந்த வரிசையில் விஜயகாந்த் இரண்டு வருடங்களில் நடித்த முதல் படம் 'ராமன் ஸ்ரீராமன்'. பிரசாத் டி.கே.இயக்கிய இப்படத்தை பாபு கே தயாரித்தார். விஜயகாந்த் ஜோடியாக ஜோதி நடித்தார். சிவாஜி ராஜா இசை அமைத்தார். சத்யராஜ் வில்லனாக நடித்தார். கவுண்டமணி அனுராதா வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோரும் நடித்தார்கள்.
இந்த படம் தவிர வானத்தைப்போல, தவசி, பேரரசு, மரியாதை, நல்லவன், கண்ணுபட போகுதய்யா, ராஜதுரை, உழவன் மகன், தர்மம் வெல்லும் உள்பட பல படங்களில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்தார்.