‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ்ப் படங்களை மட்டுமல்லாது உலக மொழிப் படங்களையும் பார்க்கும் ரசிகர்களாக சமீப காலங்களில் மாறிவிட்டார்கள். கொரியன் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இங்கு உருவாகியுள்ளது. அது போல ஜப்பானியப் படங்களுக்கும் ஆரம்பமாகியுள்ளது.
'Demon Slayer: Kimetsu no Yaiba' என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ஏறக்குறைய ஹவுஸ்புல் ஆகியும், மற்ற தியேட்டர்களிலும் சில காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
ஜப்பானிஸ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. ஜப்பானில் ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படம் ஒரே வாரத்தில் 10 பில்லியன் ஜப்பானிய யென்களை வசூலித்தது. தற்போது தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.