ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
விக்ரம்-ஜீவா நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். மலையாளப்பட டைரக்டரான இவர் இந்தியிலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சோலோ என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேஹா சர்மா ஆகிய நடிகைகள் நடித்துள்ளனர். சதீஷ் காமெடியனாக நடித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 5-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது துல்கர்சல்மான் பேசுகையில், நான் இதுவரை நடித்த படங்களில் இந்த படம்தான் உலக அளவில் ரிலீசாகிறது. அதனால் நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது. கூடவே நான் நடித்ததில் பெரிய பட்ஜெட் பட வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது.
அதோடு, ஒரே படத்தில் நான்கு விதமான வேடம் என்கிறபோது ஒவ்வொரு வேடத்திலும் ஒரு வித்தியாசம் காட்டி நடித்தேன். அது சேலஞ்சிங்காக இருந்தது. குறிப்பாக, இந்த படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் தனித்தனியாக படமாக்கியிருக்கிறோம். அதனால் ஹீரோ, டைரக்டர் இருவரும் மலையாளிகள், கதாநாயகிகளில் தன்சிகா, ஸ்ருதியை தவிர மற்றவர்கள் மராட்டிய மொழி நடிகைகள் என்பதை மனதில் கொண்டு யாரும் மலையாள படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது நேரடி தமிழ்ப்படம் என்றார் துல்கர்சல்மான்.