முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

நடிகர் ரவி மோகன் இன்று தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவி மோகன் வில்லனாக நடித்து வரும் பராசக்தி படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், படப்பிடிப்பு தளங்களில் அமைதியாக இருக்கும் இடத்தை தேடினால் அங்கே ரவி மோகன் இருப்பார். அதையடுத்து படப்பிடிப்புக்கு தயாரானால் எந்தவித பதட்டமும் இன்றி அந்த காட்சியில் 200 சதவீதம் நடித்து கொடுப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. என் அழகான ஜென்டில்மேன் நடிகரே உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு இனிமையான நேரங்கள் அமைவதற்கு வாழ்த்துக்கள் ரவி மோகன் என பதிவிட்டுள்ளார் சுதா.
சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர், அது குறித்த ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தினார். அதோடு அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ப்ரோ கோடு என்ற படத்தில் தானே ஹீரோவாக நடிக்கும் ரவி மோகன், அதையடுத்து யோகி பாபு நடிப்பில் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.