பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

பொங்கல் வெளியீடாகத் திரையரங்குகளுக்கு வந்த படங்கள் இந்த வார ஓடிடியை ஆக்கிரமித்துள்ளது. பெரிய திரையில் பார்க்கத் தவறிய 'பராசக்தி' என இந்த வாரமும் புதிய படங்களுக்குப் பஞ்சமில்லாமல் வெளிவரவுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கொம்பு சீவி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், விஜயகாந்த் மகன், சண்முக பாண்டியன், சரத்குமார், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கொம்பு சீவி'. ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இந்த படம் நாளை(பிப்.6ம் தேதி) டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
பராசக்தி
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பராசக்தி'. மொழி திணிப்பு சமயத்தில் மாணவர்களின் பங்கு என்ன என்பதைக் குறித்து இந்த படம் பேசியது. திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம், வருகின்ற 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நீலகண்டா
மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'நீலகண்டா'. கன்னட மொழியில் வெளியான இந்த படம் நாளை( பிப்.6ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தி ராஜா சாப்
இயக்குநர் மருதி இயக்கத்தில், பிரபாஸ், மாளவிகா மேனன், நிதி அகவர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் ' தி ராஜா சாப்'. பான் இந்தியா படமாகக் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சுமார் 400கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டிய இந்த திரைப்படம், நாளை (பிப்.6ம் தேதி) ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நரி நரி நடும முரரி
தெலுங்கு இயக்குநர் ராம் அப்பாராஜு இயக்கத்தில் ஷர்வானந்த், சம்யுக்தா, சாக்ஷி வைத்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காமெடி திரைப்படம் ' நரி நரி நடும முரரி'. இந்த படம் நாளை (பிப்.6ம் தேதி) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.




