விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழில் ராட்சசன், மரகத நாணயம், ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற படங்களைக் தயாரித்த நிறுவனம் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் தில்லி பாபு கடந்த ஆண்டு இதே நாளில் மறைந்தார். இதனால் இந்நிறுவனம் பட தயாரிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் நேற்று தில்லி பாபுவின் நினைவு தினத்தன்று அவரை நினைவுகூறும் வகையில் இந்நிறுவனம் தயாரிப்பில் தேங்கி நின்ற படமான 'மிடில் கிளாஸ்' படத்தை முதல் பார்வை உடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2 வருடங்களுக்கு முன்பு பூஜை நிகழ்வுடன் அறிவித்திருந்தனர். தில்லி பாபுவின் திடீர் மறைவால் தேங்கி நின்ற இப்படம் இவ்வருடம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.