ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

'நாம் தமிழர்' என்ற கட்சியை நடத்தி வரும் சீமான், சினிமா இயக்குனராக இருந்தபோது நடிகை விஜயலட்சுமியுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 வருடம் அவருடன் குடும்பம் நடத்தியதாகவும், பின்னர் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சீமான் மீது கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதன்பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வருகிற 19ம் தேதி விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, நான் விரைவில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். அதற்கு காரணம் சீமான்தான் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சாகப் போகிறேன்
இதுகுறித்து அவர் மேலும் பேசியிருப்பதாவது: “நான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2008ம் ஆண்டு என் அக்காவின் பிரச்னைக்காக தான் நாங்க சீமானிடம் சென்றோம். அப்போது சீமானுக்கு திருமணம் ஆகவில்லை. என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லிவிட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கையை சீரழித்தார். எங்களுக்கு ரகசிய திருமணமும் நடந்தது. பின்பு என்னை நடுரோட்டில் விட்டுவிட்டார். எனக்கு உதவ வருபவர்களையும் மிரட்டுகிறார். என்னைத் தவறாக பேசுகிறார். என்னைக் காப்பாற்றுவதாகச் சொல்லி மாதம் 50 ஆயிரம் தருவதாக டீலிங் பேசினார்.
ஆனால், இப்போ கயல்விழி தான் என் உயிர் என டிராமா போடுகிறார். இப்ப கர்நாடகாவுல என்னால வாழ முடியலன்னு நான் சொன்னாலும் சரி சாவு என சொல்லுகிறார். இதுதான் தமிழ்நாட்டில் என்னுடைய கடைசி வீடியோ. இன்னும் இரண்டு நாட்களில் நான் செத்துப்போனேன் என கர்நாடகா மாநிலம் உங்களுக்கு தெரிவிக்கும். என்னோட மரணத்தைப் பற்றி விளக்கம் கொடுக்க சீமானுக்கு அழைப்பு வரும். இந்த மாதிரி ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.




