ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வெகு விமர்சையாக நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரும், இயக்குனர் அட்லி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வுகள் முடிந்ததும் ரஜினி தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் தனி ஜெட் வகை சொகுசு விமானத்தில் சென்னை திரும்பினார். விமானத்தில் அமர்ந்து பயணிக்கும் படத்தை ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விழாவில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பும் அன்பான கவனிப்பும் கொடுத்த நீதா மற்றும் அம்பானி ஆகியோருக்கு நன்றி. அனந்த் மற்றும் ராதிகாவின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் ஒரு மேஜிக் போல இருந்தது. பசுமையான நினைவுகளுக்கு நன்றி. அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வார இறுதி நாட்களைக் கழித்தேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஜாம் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அம்பானி இந்தியாவின் பெருமை எனவும் வைகுண்டம், கைலாசத்தை அம்பானி குடும்பம் இந்த நிகழ்வு மூலம் உலகிற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த ஜெட் விமானம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், ரஜினியை கவுரவப்படுத்த இந்த பயணத்தை அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.