'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சென்னை : ‛‛சீமானை ஒன்றும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார், என் தோல்வியை ஒப்புக் கொண்டு பெங்களூருவிற்கே செல்கிறேன், சீமான் நல்லா இருக்கட்டும்'' என அவர் மீதான புகாரை வாபஸ் பெற்றுவிட்டு செய்தியாளர்களிடம் இப்படி கூறிவிட்டு சென்றார் நடிகை விஜயலட்சுமி.
நடிகரும், இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது பல ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகிறார் நடிகை விஜயலட்சுமி. தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்திய சீமான் பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார். சீமானால் நான் 7 முறை கருகலைப்பு செய்தேன் என பல குற்றச்சாட்டுகளை சீமான் மீது கூறினார் விஜயலட்சுமி. இது தொடர்பாக சமீபத்தில் சீமான் மீது சென்னையில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். சீமான் நேரில் ஆஜராக வலியுறுத்தி இருமுறை சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரம் பூதாகாரம் ஆன நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் ஆவேசமாக பேட்டியளித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார். தனிஒருவராக என்னால் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள யாரும் எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை. காவல்துறை நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. புகார் மனு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுகிறேன். சீமானிடம் போனில் பேசினேன். சீமான் சூப்பர். சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். சீமான் நல்ல இருக்கட்டும். நான் மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்'' என்றார் விஜயலட்சுமி.