ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ள படம் பிஎஸ்வி கருட வேகா. பிரவீண் இயக்கியுள்ள இந்த படத்தில் டாக்டர் ராஜசேகருடன் பூஜாகுமார், கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதன்முறையாக ஒரு அழுத்தமான டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பூஜாகுமார்.
மேலும், இந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான அந்த பாடலை மும்பையில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளனர். இந்த பாடலில் இடம்பெற்ற சன்னிலியோனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு வைரலாகியிருக்கிறது.