நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு |
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி நிவின்பாலியின் கேரியரை உயர்த்தியதிலும் இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் பங்கு ரொம்பவே அதிகம். தற்போது நடிகராக இருக்கும் வினீத்தின் தம்பி தயன் சீனிவாசனும் நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, டைரக்சனுக்குள் நுழையும் முயற்சிகளில் இருக்கிறார்.
அதனால் அவரது முதல் படத்தை வெற்றிகரமாக்கும் எண்ணத்தில் அந்தப்படத்திற்கு தானே கதை எழுதியும் வருகிறார் வினீத் சீனிவாசன். அவர் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய நிவின்பாலி தான் அவரது தம்பியை டைரக்டராக அறிமுகப்படுத்த போகிறார்.. அவரது முதல் படமே மாஸ் ஹிட்டாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தப்படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.. கிட்டத்தட்ட உறுதியானது மாதிரித்தான் என்கிறார்கள். வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.