நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை விருது வழங்கி கவுரவித்தும் வருகிறது. சமீபத்தில் ஜீ தமிழ் விருதுகள் நடந்து முடிந்தன. அடுத்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது.
மிகபிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் 1 சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் ஆக்ஷன், பெஸ்ட் மாஸ்பில்டப், பெஸ்ட் காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி, மிஷ்கின், சுந்தர்சி, சீமான், தமிழிசைசௌந்தராஜன், மிர்னாலினி, மீனாட்சி, சங்கீதா, விடிவிகணேஷ், ரித்விகா, ஜி.விபிரகாஷ், அருண்ராஜா காமராஜா, கதிர் என பல நடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த விருது விழா நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக நாளை மே 1 அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.