விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவை சேர்ந்த அனைவரும் எதிர்பார்த்தபடி மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக 150 கோடி கிளப்பிற்குள் நுழைந்துள்ளது மோகன்லால் நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'புலி முருகன்' படம். இதுநாள் வரை வியாபார ரீதியாக ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே சுழன்று வந்த மலையாள சினிமாவை மிகப்பெரிய உயரத்திற்கு இட்டுச்சென்றதன் மூலம் தனக்கு பின்னால் வருபவர்களுக்கு ஒரு புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் மோகன்லால்.
சுமார் முப்பது கோடி ரூபாயில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப்படம் தான் மலையாள சினிமாவில் அதிகம் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படமும் கூட... தமிழில் இப்போது வந்த சிவகார்த்திகேயன் படத்திற்கே 25 கோடி செலவு செய்யப்படும் வேளையில், மலையாளத்தில் அதுவும் மோகன்லால் நடித்தாலும் கூட இந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதையே ரிஸ்க் என கூறி பின்வாங்கியவர்கள் பலரும் இன்று இந்த சாதனையை கண்டு வாய்பிளந்து நிற்கிறார்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது தெலுங்கிலும் 'மான்யம் புலி' என்கிற பெயரில் வெளியாகி இன்னும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.