பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் |
மலையாள திரையுலகில் கடந்த ஐந்து வருடங்களிலேயே வித்தியாசமான கதைகளையும், கதைக்களங்களையும் தனது படங்களில் காட்டி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. கமர்சியல் வெற்றி என்பதை விட விருதுகளை குவிக்கும் படங்களாக தான் அவர் இயக்கி வந்தார். மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம், மம்முட்டிக்கும் படத்திற்கும் விருதுகளை பெற்று தந்தது. அதேபோல அவர் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கினார்.
வரலாற்று பின்னணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன போது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்து தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை வைத்து ஒரு வீடியோவாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி .
இதற்கு 'நவரசா ; ஒன்பது முகங்களும் ஒரு ஆன்மாவும்” என கேப்சன் வைத்துள்ளார். அந்த படத்தில் மோகன்லால் பல்வேறு இடங்களில் விதவிதமாக காட்டும் ஒன்பது விதமான முக பாவங்களை ஒன்றிணைத்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.