விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கடந்த சில நாட்களாக மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ கர்னல் பதவிக்கு ஆபத்து என்கிற விதமாகவும் அவரிடமிருந்து அந்தப்பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் என்கிற விதமாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. மோகன்லால் தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவியை, தான் கேரளா அரசுக்கு நடித்துக்கொடுத்த விளம்பரம் ஒன்றுக்காக சுயநலமாக பயன்படுத்தினார் என்றும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது தவறான செய்தி என மறுத்துள்ளார் மோகன்லாலின் நண்பரும் இயக்குனரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி.
இந்த செய்தி பழைய செய்தி என்று கூறியுள்ளார் மேஜர் ரவி, இந்த சர்ச்சைக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே மத்திய அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனியும் மோகன்லாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் அதன்பின்னும் இந்த செய்தியை இப்போது புதியது போல சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் என்றால் அது மோகன்லாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்” என விளக்கம் அளித்துள்ளார் மேஜர் ரவி.