ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழில் ஜெயம் ரவி நடித்த தனிஒருவன் படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு திரும்பிய அரவிந்த் சாமிக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தனிஒருவன், படத்தில் வில்லத்தனமான ஹீரோவாக மிரட்டிய அரவிந்த் சாமி தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா திரைப்படம் இன்று(டிசம்பர் 8) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் துருவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராம் சரண், அரவிந்த் சாமியுடன் நடிக்க முதலில் பயந்ததாகவும், தன்னுடன் இயல்பாக பழகிய அரவிந்த் சாமி, தனது பயத்தைப் போக்கி தன்னை நெருங்கிய நண்பராக ஏற்றுக் கொண்டதாகவும் ராம் சரண் கூறியுள்ளார். ப்ரூஸ் லீ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த தனக்கு தனி ஒருவன் புதிய உற்சாகம் கொடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய தூண்டியதாகக் கூறியுள்ள ராம் சரண் இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.