100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மொத்த மலையாள சினிமா உலகத்துக்கும் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் ஷாக்காகத்தான் இருக்கும். ஆம்.. முதன்முறையாக மொட்டைத்தலையுடன் நடிக்க இருக்கிறாராம் மோகன்லால்.. நேற்றில் இருந்து மொட்டைத்தலையுடன், கையில் சின்னதாக டின் சரக்கு மற்றும் சிகரெட்டுடன் மோகன்லால் காட்சியளிப்பது போன்ற அனிமேசன் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.. யாரோ ஒரு ரசிகர் இப்படி ஒரு புகைப்படத்தை கற்பனையில் வரைந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் கூட, இதை மோகன்லால் பேன்ஸ் கிளப்பும், அவரது அதிகாரப்பூர்வமான வலைதளமும் ஷேர் செய்திருப்பதால் இந்த கெட்டப் பல யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறது.
தற்போது மோகன்லால் மேஜர் ரவி டைரக்சனில் நடித்து வரும் படம் '1971 பியாண்ட் தி பார்டர்ஸ்'.. இந்தப்படத்தில் மோகன்லால் இரண்டு வேடங்களில் நடிக இருக்கிறார்.. அதில் பிளாஸ்பேக்கில் வரும் மோகன்லாலின் கெட்டப் தான் இது என சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் அடுத்து மோகன்லாலை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் தான் மோகன்லால் இதுபோன்ற வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.. உண்மை என்னவென்று ஒரு சில தினங்களில் வெளிவரும் என நம்பலாம்.