கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
மலையாளத்தில் மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா மற்றும் மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் வைசாக் தற்போது அவரை வைத்து மூன்றாவது முறையாக டர்போ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் தான் மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர். புலிமுருகன் படத்தில் மோகன்லாலின் ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதேபோன்று தற்போது டர்போ படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி வருகிறார் வைசாக்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டியிடம் தான் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் இயக்குனர் வைசாக். இது குறித்து அவர் கூறும்போது, “சாரி மம்மூக்கா(மம்முட்டி).. நீங்கள் என்னிடம் பலமுறை கேட்டுக் கொண்டும் கூட நான் உங்கள் வயதை (72) மறந்து விட்டேன். அப்போது மற்றவர்களிடம் சொல்லும்போது கூட மம்மூக்காவிற்கு 45 முதல் 50 வயது மட்டுமே ஆனதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல மம்முட்டியின் கண்கள் தான் இந்த படத்தில் அவரது வயதை தீர்மானிக்கின்றன. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வயதாகவே அவரை நினைத்து மிகப்பெரிய சவாலான ஆக்ஷன் காட்சிகளில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன். சில நேரங்களில் விடியற்காலை மூன்று, நான்கு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தி அவருக்கு சிரமம் கொடுத்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை மம்மூக்கா தான்” என்று கூறியுள்ளார்.