பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் |
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சொப்ன சஞ்சாரி' படத்தில் ஜெயராமின் மகளாக, பள்ளி செல்லும் மாணவியாக நடித்த இந்த அனு இம்மானுவேல், மலையாள தயாரிப்பாளரான தங்கச்சன் இம்மானுவேலின் மகளும் ஆவார். இவரைத்தான் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சார்லி' படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டார்களாம். ஆனால் படிப்பு தடைபட்டுவிடும் என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு பாரினுக்கு பறந்துவிட்டார் அனு. அதன்பின் தான் அந்த வாய்ப்பு பார்வதிக்கு சென்றது.
அதன்பின்தான் ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் மீண்டும் துல்கர் சல்மான் நடிக்கும் இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் துல்கரின் படத்தில் முதல் ஷெட்யூலில் நடித்த அனு இம்மானுவேல், அந்த கேரக்டருக்கு செட்டாகவில்லை என விலக்கி விட்டார்கள். இதற்கிடையே தெலுங்கில் இருந்து அழைப்பு வரவே, அங்கு நானியுடன் இணைந்து 'மஞ்சு' என்கிற படத்தில் நடித்து படமும் ரிலீசாகிவிட்டது. தொடர்ந்து கோபிசந்த் ஜோடியாக 'ஆக்சிஜன்' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடிவந்தது.
அதை தொடர்ந்து 'பிவேர் ஆப் கிட்டு' என்கிற தெலுங்குப்படத்திலும் நடித்து வருகிறார். ஆக, மலையாளத்தை விட்டு ஒதுங்கி தெலுங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் அனு இம்மானுவேல்.. இதையெல்லாம் விடா ஜாக்பாட்டாக பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தாமாகி இருக்கிறார் அனு இம்மானுவேல். இந்தநிலையில் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. கடந்த வியாழன் வரை சென்னையில் நடந்த 'துப்பறிவாளன்' படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனு, தற்போது கோவாவில் கோபிசந்த் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்துவருகிறார்..