'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
புலி முருகன்' படத்தில் தான் ஏற்று நடித்த முருகன் கேரக்டருக்கு அப்படியே முற்றிலும் மாறான ஒரு குடும்ப சம்சாரியாக தற்போது முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. படத்தில் இவருக்கு ஜோடியாக, மனைவியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார் மீனா.. 'வெள்ளிமூங்கா' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் இயக்கம் இரண்டாவது படமே மோகன்லால் நம்ம ஊர் 'கபாலி' ரஞ்சித் அளவுக்கு இவர் மேலும் இந்தப்படத்தின் மேலும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தப்படம் கணவன் மனைவிக்குள் இழையோடும் காதல் பற்றிய கருத்தையும் சொல்கிறதாம். அதனால் இந்தப்படத்திற்காக ஒரு போட்டியை மோகன்லால் தனது வாயாலேயே அறிவித்துள்ளார்.. அதாவது ஆதர்ச கணவன்மார்கள் தங்களது மனைவி தான் தனது வாழ்க்கை என்பதை அவர்களிடம் ரொமான்டிக்காக வெளிப்படுத்தும் விதமாக 'மை லைப் மை ஒய்ப்' என்கிற வாசகத்தை சொல்லி, அதை 30 வினாடிகள் ஓடும் வீடியோவாக படமாக்கி அனுப்பும்படி கூறியுள்ளார்.. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து தம்பதிகள், இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லாலுடன் கலந்துகொள்வதுடன் அவர் கையால் சிறப்பு பரிசு பெரும் பாக்கியசாலிகளும் ஆகிறார்கள்.